வியாழன், நவம்பர் 26, 2015

புதுவையில் புத்தர் சிலைகள்


  1. அருகன்மேடு
  2. புதுவை அருங்காட்சியம்
2.1 கருவடிக்குப்பம்
2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
2.3 கிருமாம்பாக்கம்    
1. அருகன்மேடு
அமைவிடம்
புதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள  அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம்  2 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்



அருகன்
பகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.
11 வது நிகண்டு - தகரவெதுகை
 புத்தன் மால் அருகன் சாத்தன்  
 ரகரவெதுகை 
 தருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும் 
பகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.

சாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)

அருக்கன்மேடு தான்  அரிக்கமேடானது என்று உரைக்கிறார்  பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.
  1. கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மேடு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார். 
  2. அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.
  3. இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)
  4. இப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது
சில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)

2. புதுவை அருங்காட்சியம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ)  கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த  கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

2.1 கருவடிக்குப்பம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிலையமைப்பு 
கை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்

Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai) என்ற நூலில் இருந்து எடுத்த படம்
தற்பொழுது தலையின்றி  புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை. 


2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம்  3 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம். 

2.3 கிருமாம்பாக்கம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.

சிலையமைப்பு
கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)



மேலும் விரிவாக பார்க்க
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

சரவணன்  அவர்களின் காணொளி காண
https://drive.google.com/folderview?id=0B2WMRIF-1cD3WWUzMG1aNFRGUFE&usp=sharing

செவ்வாய், நவம்பர் 17, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை

கணிகிலுப்பை

அமைவிடம் 
ஊர்                       : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்
வட்டம்               : செய்யார் வட்டம்
மாவட்டம்         : திருவண்ணாமலை மாவட்டம்

காஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில்  இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி  8 ம் நூற்றண்டு  அரசு சோழர் கால சிற்பம்.

ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ்வூரின் ஏரிக்கரையில் கண்டதாக  குறிபிட்டுள்ளார்.

02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட  5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
தியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும்  அங்கு காணப்படுகிறது. 


* இன்று இவ்விநாயகர்  கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.

திங்கள், நவம்பர் 09, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவல் நிலையம்

சிவக்காஞ்சி காவல் நிலையம்

அமைவிடம்
தெரு                         : தேரடி தெரு-காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில்
ஊர்                            : காஞ்சீவரம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

சிவக்காஞ்சி (அ) பெரிய காஞ்சீவரம் காவல் நிலையம், காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் இக்காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இச்சிலை கிடைத்தது. இச்சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் (The inspector General of Police) திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவினார்.


சிலையமைப்பு
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 2 ½ அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 7ஆம் நூற்றாண்டு, 

குறிப்புகள் 
01. சோழர் காலத்து முகத்தோற்றம் இல்லாமல் ஜாவா தேச முகத்தை ஒத்துள்ளது. 

02. நூற்றாண்டு கி.பி 7ஆம்  நூற்றாண்டு   

வெள்ளி, நவம்பர் 06, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்

களகாட்டூர்  
அமைவிடம் 
ஊர்                              : களகாட்டூர்
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும்  இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன்  கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10" அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை  (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .  




குறிப்புகள்
01. கோவில்களை சுத்தம் செய்யும் சென்னை சேவா என்ற அமைப்பினர் 18-04-2015 அன்று களகட்டூர் சென்று அங்கிருந்த மூன்று கோவில்களை சுத்தம் செய்தனர். பகவன் புத்தர் சிலையில் இருந்த சுண்ணாம்பு கரையையும்  அகற்றினார்கள்.     

02.*அங்குள்ள அக்னீஸ்வரர் (சிவன்)  கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 10 ஆம் நூற்றாண்டுக்குரியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  எனவே இம்முன்று கோவில்களும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும்.  மேலும் கி.பி 10 ஆம் நூற்றண்டு முதல் களகாட்டூர் என்று அழைக்கப்படுகிறது என்றுரைக்கிறார் காஞ்சிபுர மாவட்ட தொல்லியல் கையேடு என்ற நூலின் ஆசிரியர் இரா. சிவானந்தம் பக் 148. 

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்

ஏனாத்தூர்  

அமைவிடம்
ஊர்                    : ஏனாத்தூர்
வழி                   : கோனேரி குப்பம்  வழி ஏனாத்தூர் சாலை
வட்டம்             : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு      : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ                                                       தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,

பௌத்த அடையாளங்கள்  
போதி சத்துவர் சிலை
தருமசக்கரம்                 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.

புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள் 
01.பரி பூரண மெய் ஞான நிலையை  அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை  அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
  • புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.  
  • போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது  03. இரண்டு (அ) நான்கு கைகள்  
02. ஆசிரியர்
  • புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி  
  • போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே  போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே. 
03. மறுபிறப்பு 
  • புத்தர் மறுபிறப்பு அற்றவர் 
  • போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்  

சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி  உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால்  மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின்  மீது இருக்கும்.
அணிகலன்கள்
  • இடுப்பை சுற்றி அணிகலன்
  • கழுத்து  அணிகலன்கள்
  • இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band) 
  • தோள்பட்டையில் இருந்து  தொடை வரை தொங்கும் ஆபரணம்
  • தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
  • தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின்  மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.

சிலையின்  முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து  வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக  கூறினார்.

தருமசக்கரம்
புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் (உத்திரபிரதேசம்) ஐவருக்கு அளித்தார். இவ்வுரைக்கு தம்ம சகர பரிவர்த்தன (அ) சக்கரத்தை சுழற்றுதல் என்று பெயர். நான்கு, எட்டு, பன்னிரண்டு மற்றும் இருபத்தி நான்கு ஆரங்களை கொண்ட தம்மச்சக்கரம் இருக்கிறது. 
  • நான்கு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் நான்கு உயர்ந்த உண்மைகளை குறிப்பிடுகிறது
  • எட்டு   ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் ஆரிய அட்டாங்க மார்க்கம் என்னும் எண் முறை வழியை (அ) எட்டு வித ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது
  • பன்னிரண்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் பன்னிரண்டு நிதானங்களை (காரண காரியம் (அ)  பன்னிரு சார்பு) குறிப்பிடுகிறது.
  • இருபத்தி நான்கு ஆரங்ளை கொண்ட தம்மச் சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிப்பிடுகிறது. இந்த 24 ஆரங்களில் பன்னிரண்டு ஆரங்கள், தோற்ற வரிசை (அ) பிறப்பிற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும், மீதம் இருக்கிற பன்னிரண்டு ஆரங்கள் மறைவு வரிசை (அ) இன்பத்திற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும் குறிப்பிடுகிறது. 
தமிழகத்தில் காணப்படும் தம்ம சக்கரம் 
  • கணிகிலுப்பை -கீழ்நாயக்கன் பாளையம், (காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து வலத்தோட்டம் செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது,) வெம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் 
  • கூவம் - திருவள்ளூர் மாவட்டம் 
  • திருச்சி   
  •  ஏனாத்தூர் , காஞ்சீவரம் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம் 

ஏனாத்தூர் தருமசக்கரம் 
  1. எட்டு ஆரங்களை கொண்டுள்ளது. 
  2. தம்ம சக்கரத்தின் இருபுறமும் அம்பும் வில்லும் காணப்படுகிறது 
  3. 1 1/2 அடி மண் மேலும், ஒரு அடி மண் அடியிலும் புதைந்துள்ளது
  4. சக்கரத்தின் அடியில் உள்ள எழுத்தினை பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்


இச்சிற்றுர் உள்ள ஒரு தெருவின் முடிவில் ஒரு தீர்த்தங்கரர் சிலையும் (வர்த்தமான மகாவீரர்) உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட போது, இந்த தீர்த்தங்கரர் சிலையை கண்டு எடுத்தனர். 

வியாழன், நவம்பர் 05, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்

கோனேரிகுப்பம் புத்தர்  
அமைவிடம்
ஊர்                                  :கோனேரி குப்பம்
அமைவிடம்               : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர்
                                            செல்லும் சாலையில் சாக்கிய நாயனார் கோவில் (அ)                                                     மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி                                                            அருகில்  உள்ளது.
வட்டம்                         காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்                   காஞ்சீவரம் வட்டம்

பௌத்த அடையாளங்கள்
   ஐந்து அடி உயர தூண்                            
   உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை    
   போதி தர்மாவின் ஓவியம்            

ஐந்து அடி உயர தூண்
25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின்  புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.

பகவன் புத்தர் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. 

போதி சத்துவர்களின் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால்கள் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி பகவன் புத்தருக்கு மட்டுமே ஞான முடி காணப்படும், போதி சத்துவர்ருக்கு காணப்படாது.அணிகலன்கள் கழுத்து அட்டிகைகள் (Necklace) மூன்று உள்ளது. இடுப்பை சுற்றி அணிகலன் உள்ளது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணம் முழுமையாக  காணப்படவில்லை அது உடைந்து இருக்கலாம்.


கை வலது கை தாமரை தண்டை பிடித்து கொண்டு இருக்கிறது அணிகலன்கள் கழுத்தில் அட்டிகைகள் (Necklace)  உள்ளது. ஒட்டியாணம் காணப்படுகிறது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் தம்ம சக்கரம் உள்ளது.  

உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை
உடல் பகுதியின்றி தலையுடன் பகவன் புத்தர் சிலை ஒன்றும் இங்கு கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன் உடற் பகுதி ஒன்றை உருவாக்கி புத்தரின் தலைபகுதியை இணைத்துள்ளனர். தலைபகுதியை பளபளபாக்க நன்கு தேய்த்து மெருகேற்றப்பட்டது. அதனால் புத்தர் தலை அதன் அழகை இழந்து விட்டது. மேலும் திறமை வாய்ந்த சிற்ப கலைஞரிடம் பணியை கொடுக்கப்படவில்லை. வண்ண புச்சு சேர்ந்து பகவன் புத்தர் சிலையை மேலும் கெடுத்து விட்டது. மேலே உள்ள படத்தின் இடப்பக்கம் (Left side ) அமைந்துள்ள சிலையை ( கற்பிக்கும் கை) பார்க்கவும். 

போதி தர்மாவின் ஓவியம்
கொரிய நாட்டை சார்ந்த ஒருவர் அளித்த போதி தர்மாவின் ஓவியம் ஒன்று சுவற்றில் உள்ளது.


காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்

கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்
அமைவிடம்
இடம்                          :பிள்ளையார் பாளையம்
ஊர்                             : காஞ்சீவரம்
வட்டம்                     : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்  
புத்தர் சிலைகள்                   : 02 
மணிமேகலை சிலை         : 01
தார தேவி சிலை                 : 01
பழமையான போதி மரம்  : 02

இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர்.  பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.

இதே கருத்தை  மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று. 


சிலையமைப்பு
கை                                      : நிலத்தை தொடும் கை
கால்                                    : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                        : தீப்பிழம்பாக
தலைமுடி                         : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்         : மூன்று
ஒளிவட்டம்                      : தோல்கள்  வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை                      : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                               போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  :  3 அடி உயரம்
நூற்றாண்டு                     : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


கை                                     : சிந்தனை கை
கால்                                   : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                       : தீப்பிழம்பாக
தலைமுடி                       : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்      : மூன்று
ஒளிவட்டம்                    : தோல்கள் வரை அரை  வட்ட வடிவமாகவும்,                                                                      தோல்களிலிருந்து இருபுறமும் தூண்களை                                                                          கொண்டுள்ளது தோரணம்
சீவர ஆடை                     : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                              போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  : 2’ 6” உயரம்
நூற்றாண்டு                    : கி.பி 7ஆம்  நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


மணிமேகலை சிலை: 
மார்பு வரை உள்ள ஒரு அடி உயர சிலை, கழுத்தணி (Neckless) மற்றும் Chain னுடன் காணப்படுகிறது. காதுகள் நீண்டு இருக்கிறது. முக்கின் நுனி சிறிது சிதைந்து உள்ளது.

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன் கோயில்

காமாட்சியம்மன் கோயில் 

அமைவிடம்
தெரு                         : மேட்டு தெரு, நகர பேருந்து அருகில்
ஊர்                            : காஞ்சீவரம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்
  1. பகவன் புத்தர் சிலைகள்
  2. போதிசத்துவர் சிலைகள் 
  3. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை 
  4. கல்வெட்டு

01. பகவன் புத்தர் சிலைகள்
  1. சென்னை அரசு அருங்காட்சியகம்
  2. அரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி
  3. கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில் 
  4. காணாமல் போன சிலைகள்
  5. கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபம்
02. போதிசத்துவர் சிலைகள்
  1. கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள சிற்பங்கள்
  2. கோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம். 
  3. கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை
  4. கோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தான்  
03. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை
  1. புதலதிச (Pu ta la ti sa) என்ற பானை ஓடு 
  2. புத்த தூபி
  3. உஜ்ஜைன் சின்னம் பொரித்த நாணயங்கள்
  4. நாணயங்கள்
04. கல்வெட்டு
  1. மெய் சாத்தான் கல்வெட்டு
01.1 சென்னை அரசு அருங்காட்சியகம்,  எழும்பூர், சென்னை    
தொல்பொருள் கண்காணிப்பாளர் (Superintendent of Archaeology) T A கோபிநாத ராவ்  அவர்கள் 1915 ஆம் ஆண்டு காமாட்சி அம்மன் கோவிலின் உள்ளே நின்ற நிலையில் இருந்த புத்தர் சிலையை கண்டறிந்தார். இந்த புத்தர் சிலைக்கு 'சாஸ்தா' என்று பெயர். புத்தர் இருந்த இடத்தில் ஐயப்பன் உருவத்தைப் புத்தம் புதிதாகச் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய புத்தர் சிலை இச்சிலையே. இச்சிலை தற்பொழுது சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.

'சாஸ்தா' என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று. சாத்தன் என்னும் பெயர் 'சாஸ்தா' என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. எல்லாச் சாஸ்திரங்களையும் கற்றவர் புத்தர் என்பதால் அப்பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. சாஸ்தா என்பது புத்தரை குறிப்பது என்பதற்கான பல ஆதாரங்கள் பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள்  என்ற நூலிலும் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்களின் நூலிலும் காணலாம். சாத்தான் குட்டை தெரு என்று வழங்கப்படும் தெரு புத்தர் பெருமானை குறிப்பது,  சாத்தான் என்பது சாஸ்தா என்பதன் மருவு  என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு"  என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.

சிலையமைப்பு
கைகள் இரு கரங்களும் உடைந்த நிலையில் உள்ளது* கால் நின்ற நிலை (சமநிற்கை) ஞானமுடி ஞான முடி காணப்படவில்லை, உடைக்கப்பட்டு இருக்கலாம் தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 7’ 10" அடி   நூற்றாண்டு  கி.பி 6ஆம் நூற்றாண்டு **2  அரசு பல்லவ கால சிற்பம். மூக்கு உடைந்த நிலையில் உள்ளது. 


குறிப்புகள் 
டி. ஏ. கோபிநாதராவ்
01. * வலது கை காக்கும் கை முத்திரையுடனும் (Abhaya Mudra) இடது கை தானம் ஏற்கும் பாத்திரத்துடன் இருக்கலாம் என்றுரைக்கிறார்.

02. **இந்த சிலை எந்த நூற்றாண்டுக்கு உரியது என்றுரைக்கவில்லை. அமராவதி சிலைகளின் தனிசிறப்புகளுடன் (Features) ஒப்பிட்டு இந்த சிலை ஆறாம் நூற்றாண்டுக்குரியது என கணிக்கப்பட்டுள்ளது.

03. இக்கோயில் பௌத்த பெண் தெய்வமான தாராவின் கோயிலாக இருந்து பின்பு மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர் டி. ஏ. கோபிநாதராவ்.











01.2 அரசு கா. மு. சுப்புராயர் உயர்நிலைப்பள்ளி
அமைவிடம்
தெரு                   : சுப்பிரமணி முதலி தெரு,காமாட்சியம்மன் கோயில்  அருகில்  
ஊர்                      : காஞ்சீவரம்
வட்டம்              : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்

கோவிலின் தோட்டத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை கோவிலின் அருகில் அமைந்துள்ள பள்ளி வளாகத்திற்க்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி  அவர்களின் பௌத்தமும் தமிழும் என்ற நூலில் காமாட்சியம்மன் கோவிலின் தோட்டத்தில் இருந்த புத்தர் சிலை என்று குறிப்பிட்டுள்ள படத்திலிருந்து இதனை உறுதி செய்யலாம்.http://www.ambedkar.in/ambedkar/subPage.php?articleId=79&categoryId=13 ( பார்க்க  பக்கம் 5 படம் 7 )

பள்ளி வளாகத்தில் உள்ள பழமையான வசந்த மண்டபத்தில் இருந்த இந்த புத்தர் சிலையை பள்ளி வளாகத்திற்க்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடுகிறார் அறிஞர் Dr K சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu). மேலும் இந்த மண்டபம் 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும் அதன் அடிப்படையை (Foundation) அமைக்கும் பொழுது நின்ற கோலம் கொண்ட புத்தர் சிலைகள் காணப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம். பழமையான வசந்த மண்டபம் தற்பொழுது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.

இங்கு அருகில் உள்ள வைதிகர்கள் பகவன் புத்தர் சிலையின் முகத்தில் எண்ணெய் தேய்த்தும், தலை சுருள் முடியில் சந்தனம் இட்டும், கழுத்து வரை காவி உடை அணிவித்தும் வருகின்றனர். இச்சிலையை காணப்போகும் பௌத்தர்கள், காவி உடையை அவிழ்த்து விட்டு வருகின்றனர். எனவே பகவன் புத்தர் சிலையின்  முகம் மட்டும் மிக கருமையாக காணப்படுகிறது.

சிலையமைப்பு
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள்  கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது  சிலை உயரம் 5 1/2  அடி உயரம்  நூற்றாண்டு கி.பி 7ஆம்  நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம். 


01.3 கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோவில்
விரிவாக பார்க்க http://elambodhi.blogspot.in/2015/11/ii.html

01.4 காணாமல் போன (அ) அழிக்கப்பட்ட சிலைகள்
01. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தச் சிலைகள் இப்பொது காணப்படவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி  அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். நின்ற நிலை, இருந்த நிலை (அமர்ந்த) மற்றும் கிடந்த நிலை (பரிநிர்வாண) என மூன்று  நிலைகளிலும்  இங்கு புத்தர் சிலை இருந்தது என பலர் கூறுகின்றனர். பின்னர் பெருமாள் நின்ற நிலை, இருந்த நிலை மற்றும் கிடந்த நிலையாக மாற்றப்பட்டுள்ளது.     

02. தோட்டத்தில் உள்ள மண்டபத்தை கட்டிய பொழுது இத்தோட்டத்தில் இருந்த புத்த உருவங்களையும் அதன் அடியில் புதைத்துவிட்டனர் என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். 

03.இக்கோயிலில் இருந்த வேறு புத்த உருவங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டுகளுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால், அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை  என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி அவர்கள் பௌத்தமும் தமிழும் என்ற நூலில். 

04. அமர்ந்த நிலையில் அமைந்திருந்த புத்தர் சிலையை ஒன்றை  T A கோபிநாத ராவ்  அவர்கள் பார்த்திருந்தார். கோவிலின் வடக்கு கோபுரம் அருகில் கவனிக்கப்படாத நிலையில் புத்தர் சிலை கீழ் பகுதி மட்டும் இருந்தது. அந்த சிலையும் மிக மோசமாக சேதமடைந்து இருந்ததாக குறிப்பிடுகிறார்  அறிஞர் Dr K சிவராமலிங்கம் ( Archaeological Atlas of the Antique Remains of Buddhism in Tamilnadu)

05. கல்யாண மண்டபத்திற்கு அருகில் உள்ள கோவிலில் தலை மட்டும் உள்ள சிலை இருந்தது.

01.5 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் லோகநாதர் சிலைக்கு மேல் உள்ள புடைப்பு சிற்பம்.


02.1 கொடிமரம் அருகில் உள்ள யாசக மண்டபத்தில் உள்ள  புடைப்பு சிற்பங்கள்

இந்திய தொல் பொருள் ஆய்வு அறிஞர் Dr.K.R வெங்கடராமன் பொது அறிவுறுத்தல்கள் மற்றும் வரலாற்று பதிவு இயக்குனர் 1973ஆம் ஆண்டு எழுதிய    "தேவி காமாட்சி" என்ற  தம் நூலில் குறிப்பிடுவது
  • காமாட்சியம்மன் கோயில் மண்டபம் தூண் மீது மானஸ்தம்பத்தின் அருகில்   தாராதேவி உருவம் காணப்படுகின்றன. சில தூண்களில் தாரா தேவி உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 
  • கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயகீரிவர் (Hayagriva) உருவமும் காணப்படுகிறது.
  • எங்கே தாரா தேவியும் ஹயக்கீரிவரும் காணப்படுகின்றனரோ அங்கே லோகநாதர் காணப்படுவார். அங்கே  சிதைந்து  காணப்படும் சிலை லோகநாதர் சிற்பமாக இருக்கவேண்டும்.
  • கோயிலின் மானஸ்தம்பத்தின் உச்சியில் பிரம்ம தேவயச்சன் என்ற சாத்தானின் உருவம் பொறிக்கப்படிருக்கிறது 

யாசக மண்டபம் 
நீளவாக்கில் 6 தூண்கள் அகலவாக்கில் 4 தூண்கள் ஆக 24 தூண்களை கொண்டுள்ளது இம்மண்டபம். மிக பழமையான நான்கு தூண்களில் பௌத்த சிற்பங்கள் காணப்படுகிறது. தாரா தேவி அதாவது மணிமேகலை சிற்பங்களை சிலர் புத்தர் சிலை என்று தவறாக கருதுகின்றனர். சிந்தனை கை மற்றும் தாமரை அமர்வில் சிற்பங்கள் இருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர். மார்பக பகுதி, இடுப்பு பகுதி மற்றும் அணிந்திருக்கும் அணிகலன்கள் அச்சிலைகள் புத்தர் சிலை அல்ல மாறாக மணிமேகலை சிற்பம் என்ற உறுதிக்கு வரமுடியும்.        
சிதைந்து  காணப்படும் லோகநாதர் சிலை

யாசக மண்டப தூண் மீது காணப்படும் தாராதேவி என்ற மணிமேகலை சிற்பங்கள்  
https://drive.google.com/folderview?id=0B2WMRIF-1cD3ZVBiYzVlbmljT0k&usp=sharing


02.2 கோவிலின் குளக்கரை அருகில் உள்ள 4கால் மண்டபத்தில் உள்ள சிற்பம்.
02.3 கிழக்கு கோபுரத்தின் தெற்கு நுழைவாயில் ஹயக்கீரிவர் சிலை



03. தொல்பொருள் ஆய்வில் கண்டறியப்பட்டவை
ஆண்டு: 1962-63 அறிஞர்: Dr.R. சுப்ரமண்யம் அமைப்பு:இந்தியத் தொல்லியல் ஆய்வு தெற்கு வட்டம் இடம் :காஞ்சி காமகோடி, காஞ்சிபுரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். காஞ்சி காமகோடி மடவளாகத்தில் மாதிரி குழிகள் வெட்டி அகழ்வாய்வு மேற்கொண்டார். 4.8 மீட்டர் அழம் வரை அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது.
  • ஏறத்தாழ ஐம்பது கூம்பு வடிவ சட்டிகள்
  • உஜ்ஜெயின் சின்னம் உள்ள செம்பு காசு  
  • கி.பி 2 ஆம் நூற்றாண்டை சார்ந்த சாதவாகன செப்பு நாணயங்கள் (Copper Coin). அவற்றில் ஒன்று தெளிவாக 'ருத்ர சதர்கனி ‘ பெயரை தாங்கி இருந்தது. Indian Archealogy a Review 1962-63 Page no 12

சாதவாகனர் காசுகள் கண்டறியப்பட்டிருப்பது காஞ்சியில் பல்லவர் எழுச்சிக்கு முன்னீடாக கி.பி.1 ஆம் மற்றும் 2 ஆம் நூற்றாண்டுகளில் காஞ்சிபுரத்தில் சாதவாகனரின் அரசியல் தாக்குரவின் தாக்கத்திற்கும் தொடர்பிற்கும் சான்றுரைக்கின்றன. பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு).

ஆண்டு: 1969-70 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் துறை பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருள் ஆய்வுத்துறை இடம் : 01. காமாட்சி அம்மன் கோவில் 02. ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடம். காமாட்சி அம்மன் கோவில் அருகில் (KCM-1) ஒரு அகழாய்வு குழியும் எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் (KCM-2, KCM-2A அண்ட் KCM-3) மூன்று அகழாய்வு குழிகள் வெட்டப்பட்டது. நான்கு அகழாய்வு குழிகள் ஆறு மீட்டர் அழம் வரை வெட்டப்பட்டது.
  • புதலதிச (Pu ta la ti sa) என்ற ஐந்து பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சாம்பல் நிறப்பானை ஓடு கண்டெடுக்கப்பட்டது. இதில் பொறிக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள் கி.பி ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் காணப்படுகின்றது. "புதலதிச" என்பது ஒரு பௌத்த துறவியின் பெயராக இருத்தல் வேண்டும் எனக் கூறப்படுகிறது. KCM-1
  • கீழ் மண்ணடுக்கில் காணப்பட்ட கட்டட செங்கற்கள் புத்த விகாரையின் கட்டடப்பகுதியின் செங்கற்களாக இருத்தல் வேண்டும் என்று கண்டறிந்தனர்.
  • அங்கு கிடைத்த வட்ட வடிவமான ஒரு கட்டிடப்பகுதியின்    எஞ்சிய பகுதியாகும். இப்பகுதி புத்த தூபியின்   அடிப்பகுதியாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.

ஆண்டு: 1970-71 அமைப்பு: சென்னை பல்கலைக்கழகம் அறிஞர் பேராசிரியர் T.V. மகாலிங்கம் இடம் :காமாட்சி அம்மன் கோவில்.  பேராசிரியர் T.V. மகாலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின் படி Dr.G. கிருஷ்ணமூர்த்தி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் அகழாய்வு செய்தனர். மூன்று அகழாய்வு குழிகள் (KCM-4)காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் வெட்டப்பட்டது. பல பௌத்த ஸ்துபங்கள் காஞ்சிவரத்தில் கட்டபட்டு இருந்ததர்க்கான மேலும் ஆதாரங்களை இந்த அகழாய்வு அளித்தது. இந்த அகழாய்வின் பொது பல்வேறு பொருள்கள் கண்டறிய பட்டது. அவைகள்
01. ஓடுகள்
02. சுடுமண் மனித சிலைகள் (Terracotta human figurines)
03. விரிவான தலை பாகை (Elaborate headdress)
04. மூன்று நாணய அச்சுகள்
05. உஜ்ஜைன் சின்னம்
06. நான்கு தாயத்துக்கள் (Four amulets)
07. சிப்பி வளையல்கள்,
08. இரட்டை மீன் மற்றும் உஜ்ஜைன் சின்னம்* பொரித்த நாணயங்கள் கண்டுபிடிப்பு சாதவாகனர்களின் செல்வாக்கை குறிக்கிறது.
09. இஸ்துப கட்டடமைப்பு

உஜ்ஜைன் சின்னம்* - உஜ்ஜைன் என்ற இடமானது இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ளது. மல்வா மாவட்டத்தின் கசிப்ரா   ஆற்றங்கரையில் உஜ்ஜைன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில்  அகழ்வாராய்சி செய்து வந்த சுன்னின்காம் (A.Chunningham) என்பவர் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையில் ஆனா அடையாளத்தை அடையாளப்படுத்த முடியாததால் உஜ்ஜைன் அடையாளம் என்றார். அன்று முதல் உஜ்ஜைன் அடையாளம் என்று அழைக்கப்படுகிறது. உஜ்ஜைன் அடையாளம் என்பது நாணயத்தின் தலை பகுதியில் நான்கு வட்டமும் நாணயத்தின் மறுபக்கத்தில் கீழ்காணும் ஒரு விலங்கு அல்லது மனிதன் காணப்படுவார்

நான்கு விலங்குகள்
01. யானை
02. காளை
03. குதிரை
04. சிங்கம்

இந்த நான்கு விலங்குகளும் பகவன் புத்தரின் வாழ்கையோடு தொடர்புடையது. பகவன் புத்தரின் பிறப்பை உணர்த்தும் நினைவுச்சின்னம் யானை, இல்லற வாழ்வை உணர்த்தும் நினைவுச்சின்னம் காளை, பெருந்துறவை உணர்த்தும் நினைவுச்சின்னம் குதிரை, பேருரையை உணர்த்தும் நினைவுச்சின்னம்  சிங்கம். புத்த தூபியில் உள்ள நான்கு சிங்கங்களுக்கு கீழ் இந்த நான்கு விலங்குகளும் பொறிக்கப்பட்டிருக்கும் (Lion Capital).

நாணயத்தின் மறுபக்கத்தில் காணப்படும் மனிதன் பகவன் புத்தராக இருக்க வாய்ப்பில்லை அந்த உருவம் அரசனாக இருக்கலாம். உஜ்ஜைன் சின்னம் எனப்படும் நான்கு வட்டம் நான்கு பெரும் உண்மைகளை குறிப்பிடுகிறது.


09. எஞ்சியுள்ள இஸ்துப கட்டடமைப்பு கண்டறியப்பட்டது. இந்த அமைப்பு நான்கு வரிசையிலான செங்கற்கள் படிப்புகள் கொண்டிருந்தது. கீழ் இரு வரிசை படிப்புகளில் உள்ள செங்கற்கள் வட்டத்தின் ஒரு பகுதியை உருவாக்குகிறது. மேல் இரு வரிசை நீண்ட செவ்வக அமைப்பில் படிப்புகளில் உள்ள செங்கற்கள் நேராக செல்கின்றது. இந்த இஸ்துப அமைப்பு கி. மு 2-1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ஒரு வரிசையில் உள்ள தூண் துளைகள் இங்கு கூரை அமைப்பு  இருந்தமைக்கான சான்றாக அமைகிறது.

ஆண்டு 1971-72 அமைப்பு சென்னை பல்கலைக்கழகம் அறிஞர் Dr.C.கிருஷ்ணமுர்த்தி இடம் காமாட்சி அம்மன் கோவில். Dr.C.கிருஷ்ணமுர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின் படி A.சுவாமி மற்றும் S. குருமூர்த்தி அவர்களின் உதவியுடன் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்தனர். இங்கு
  • செங்கற்கள் கட்டிட எச்சம் முழுவதும் காணப்பட்டது.
  • இருவரிசை சுவர்களை கொண்டிருந்தது. 
  • வடக்கிலிருந்து தெற்கில் செல்லும் சுவர்களாக அமைந்திருந்தது
  • மேல் சுவர் (56x23x8 cm) நேராகவும், கீழ் சுவர் (40x18x6 cm) வளைகோடாக வட்டத்தை உருவாக்கும் திட்டத்துடன் அமைந்திருந்தது. (பௌத்த ஸ்தூபி அமைப்புடைய கட்டிடப்பகுதி)
  • மற்றொரு சுவர் சுமார் ஒரு மீட்டர் அளவில் காணப்பட்டது
  • இச்சுவர்களை சுற்றிலும் ஏராளமான தூண்கள் நடப்பட்டு இருந்ததற்கான குழிகள் காணப்பட்டன. இக்குழிகள் மண்ணாலும் சாம்பலாமும் நிரப்பப்பட்டிருந்தன.
  • அத்துறையினர் இப்பகுதி தீயினால் அழிக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதிகின்றனர்.
  • இந்த அகழ் ஆய்வின் பொது பல்வேறு பொருள்கள கண்டறிய பட்டது. அவைகள் பானைகள், பிராமி எழுத்துடன் கூடிய ஓடுகள், சாதவாகனர் காலத்திய சுடுமண் நாணய அச்சு, அம்பு தலைகள், சிப்பி வளையல்கள் etc (01/55-56) Indian Archaeology 1971-72 A Reviwe Page no 43

04. கல்வெட்டு
இன்றும் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரகாரத்தின் மேற்குச்சுவரில் ஒரு சிறிய சன்னதி அருகில் அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் பாடலும் விளக்கமும் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது.

மேற்கோள் பாடல்
"கச்சி வளைக்கைச்சி காமகோட் டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் - கைச்செண்டு
கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான்
செம்பொற் கிரிதிரித்த செண்டு" 
எழுதி வைக்கப்பட்டிருக்கும்  பாடல் விளக்கம்
காஞ்சிபுரத்திலுள்ள வளையளை கையிலலிந்த காமாட்சியம்மன் கோவிலில் காவல் புரியும் மகிழ்ச்சி மிக்க சாத்தானின் (ஐயனாரின்) கையிலிருக்கும் செண்டயுதத்தை பெற்றுக்கொண்டு கரிகாற் சோழன் இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான்.

மேற்கோள் பாடல் குறிப்பு
நூல் : சிலப்பதிகாரம்
காண்டம்: புகார்க்காண்டம்
காதை : இந்திர விழவு ஊர் எடுத்த காதை
வரி எண் : 53-58
உரை ஆசிரியர் : அடியார்க்கு நல்லார்

இப்பாடல் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சாத்தான் காவல் இருந்ததை கூறுகின்றது.